• Sep 27 2022

கமெர்ஷியல் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாக அமைந்துள்ள யானை திரைப்படத்தின் திரைவிமர்சனம்

Listen News!
stella / 2 months ago
image
Listen News!

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மாஸ் நடிகராக அறியமப்பட்டவர் தான் அருண் விஜய். இப்படத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்ததன் மூலம் பிரபல்யமான இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் யானை . இப்படத்தை கமெர்ஷியல் இயக்குநரும் இவருடைய மச்சினனுமான ஹரி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இவருடன் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட் என பல முன்னணி நட்சத்திரங்கள்நடித்துள்ளனர். இப்படமானது இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி இப்படத்தின் கதைக்களம் என்ன என்று பார்ப்போம்.

ஊருக்குள் கௌரமாக வாழ்ந்து வரும் பிஆர்வி குடும்பத்தின் இளைய மகனாக வரும் ரவி { அருண் விஜய் }, குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். என்னதான், அருண் விஜய் தனது அண்ணன்களை உடன்பிறந்தவர்கள் என்று பார்த்தாலும், அவர்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவன் தான் என்று நினைக்கிறார்கள். இப்படி ஒரு புறம் கதை நகர, மற்றொரு புறம், பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பாகையை தீர்த்துக்கொள்ள, ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார், வில்லன் லிங்கம் { ராமச்சந்திர ராஜு }. பகையை சுமுகமாக முடிக்க நினைக்கும் அருண் விஜய், அதற்கான பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இந்த சமயத்தில், பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நடக்கிறது.

இதில் சிக்கிக்கொள்ளும் அருண் விஜய், தனது அண்ணன்களின் கண்களுக்கு விரோதியாக தெரிய, உடனடியாக வீட்டை விட்டு அண்ணன் சமுத்திரக்கனியால் வெளியேற்றப்படுகிறார் . இதன்பின், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? பகையுடன் திரிந்துகொண்டிருந்த லிங்கம், பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தார்? அருண் விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தைப் பற்றிக் கூறப்போனால் அருண்விஜய் இப்படத்தில் ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சண்டை காட்சிகளில் மிரட்டியிருக்கின்றார். கதாநாயகியாக வரும் பிரியா பவானி ஷங்கரும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ராதிகா தனது அனுபவ நடிப்பை எதார்த்ததுடன் சேர்த்து காட்டியுள்ளார். அதே போல அண்ணனாக வரும் சமுத்திரக்கனி வில்லனாக வந்து, கடைசியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்ட நடிகர் ராமச்சந்திர ராஜு நடிகை அம்மு அபிராமி ஆகியோரும் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்களோடு யோகி பாபு நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், படத்துடன் ஒன்றிப்போகிறார். இவர்களுடன் நடித்த ஏனைய பிரபலங்களும் இப்படத்தில் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். இப்படத்தை ஹரி விறுவிறுப்பாக எடுத்தாலும் சில இடங்களில் சலிப்புத் தட்டத் தான் செய்கின்றது.

ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் பெரிதளவில் ஒர்கவுட் ஆகவில்லை. ஆனால், பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்கிறது. முக்கியமாக சண்டை காட்சிகளுக்கு அமைத்திருக்கும் பின்னணி இசை சூப்பர். எஸ். கோபிநாத்தின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. ஆண்டனியின் எடிட்டிங் பக்காவாக இருந்தது. மொத்தத்தில், யானை' கமெர்ஷியல் ரசிகர்களுக்கு மாஸ் விருந்தாக அமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%