• Apr 20 2024

பாவம் நம்ம ஸ்ருதி ஹாசன்- மோசமான பிரச்சினையால் அவதிப்படுறாங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஏழாம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் உலகநாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள்.தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிப்பது மட்டுமன்றி நடனம் ஆடுவதிலும், பாடுவதிலும் பல்வேறு திறமை கொண்டவர் நடிகை சுருதி ஹாசன்.இவ்வாறு பிஸியாக சினிமாவில் நடித்து வரும் இவர், தற்போது கே.ஜி.ஃப் படத்தை இயக்கிய பிரசாத் நீல் இயக்கத்தில் சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கின்றார். இதை அடுத்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில்,தற்போது இவர் ஹார்மோன் கோளாறுகளால் கருப்பை வீக்கம் போன்ற பிரச்சினைகளினால் அவதிப்படுவதாக வீடியோ ஒன்றை பகிந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது பாலிசிஸ்ட்டிக் ஓவரி சின்ரோம் எனப்படும் கருப்பை வீக்கம் மற்றும் கருப்பையை சுற்றி நீர்கட்டிகள் வருதல்,எண்டோமெட்ரியோஸிஸ் எனப்படும் ஹார்மன் கோளாறுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.இதனால் சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை பெண்கள் அறிவார்கள்.

இது எவ்வளவு கடுமையான போராட்டம் என்பதை பெண்கள் நன்றாகவே அறிவர்.இந்த பாதிப்புகளை எதிர்த்து போராட தொடங்கியுள்ளேன்.நம் உடல் சந்திக்கும் இயற்கை பிரச்சினைகள் என இவற்றை எதிர்கொள்ள தொடங்கியுள்ளேன்.சரியான உணவுப்பழக்கவழக்கம், நல்ல ஓய்வு மற்றும் உடற்பயிற்சிகள் வாயிலாக இந்த ஹார்மோன் குறைபாடுகளை சிறப்பாக கையாளுகின்றேன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement