• Jan 19 2025

தீவிர வேண்டுதலில் கோவிலை சுற்றி விழுந்து உருண்ட சரத்குமார்.. யார் யாருக்காக தெரியுமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் நடந்து முடிந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து சரத்குமார் மற்றும் ராதிகா இருவருமே தேர்தலின் போது பிரச்சார நடவடிக்கைகளிலும் தீவிரமாக இடுபட்டார்கள்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலை ஏழு கட்டமாக பிரித்து நடத்தப்பட்டு முடிந்த நிலையில், தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான கணிப்பு முடிவுகளும் கடந்த சனிக்கிழமை வெளியானது.

இந்த நிலையில், தன்னுடைய மனைவி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று சரத்குமார் கோவிலில் அங்க பிரதிஷ்டம் செய்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.


அதன்படி விருதுநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சரத்குமார் அவருடைய மனைவி ராதிகா இருவருமே வருகை தந்துள்ளார்கள்.

இதன் போது நாடாளுமன்ற தேர்தலில் ராதிகா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற வேண்டுமென்றும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டுமென்றும் அங்க  பிரதிஷ்டம் செய்து உள்ளார் சரத்குமார்.

Advertisement

Advertisement