• Jan 19 2025

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ மூத்த மருமகள் இவரா? திருமணத்திற்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலுக்கு நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த சீரியலில் ஒரு திடீர் திருப்பமாக நான்கு ஆண்டுகள் கழித்து சீரியல் நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின், பாண்டியன் என்ற கேரக்டரில்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்து வருகிறார். இந்த தம்பதிகளின் மூன்று மகன்களாக ஆகாஷ் பிரேம்குமார், விஜே கதிர்வேல் மற்றும் வசந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டாவது மகன் கதிர்வேல் மற்றும் மூன்றாவது மகன் வசந்த் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூத்த மகனுக்கு மட்டும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் குடும்பத்தினர் சோகமாக உள்ளனர். அவருக்கு ஒரு சில பெண் பார்க்கப்பட்ட நிலையிலும் அது கைகூடி வராததால் தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் மூத்த மகனாக நடிக்கும் ஆகாஷ் ஜோடியாக நடிக்க சரண்யா துரடி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் அடுத்த வாரம் அவரது எண்ட்ரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் டிவியில் மிகவும் பிரபலமானஆயுத எழுத்துஎன்ற சீரியலில் இவர் நடித்துள்ள நிலையில் திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும்பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் மூலம் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement