ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை தேவயானியின் மகள் இனியா.
இவர் தனது அம்மாவைப் போல நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது சொந்த முயற்சியால் பாடகியாகி உள்ளார். மேலும் இவர் கதாநாயகியாக ஒரு படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.
2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த பல படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்தார். அவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களுடைய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில், நடிகை தேவயானி மகள் இனியா தனது இருபதாவது வயதில் காலடி பதித்துள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் பார்ப்பதற்கு கிளாமராக காணப்படுகிறார் இனியா. தற்போது அவருடைய பிறந்தநாளுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!