பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி பாண்டியன் கிட்ட இந்நேரம் ஊரு முழுக்க சரவணனோட கதை தெரிஞ்சிருக்கும் என்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் சரவணன் பற்றி யாருமே எதுவும் கதைக்கமாட்டாங்க என்று சொல்லிட்டு சரவணனை கடைக்கு கூட்டிக்கொண்டு போறார். அதனை அடுத்து மீனா மயில் வீட்ட போய் அழாதீங்க என்கிறார். அதைப் பார்த்த பாக்கியம் உனக்காவது இவளைப் பார்க்கணும் என்று தோணிச்சே என்கிறார்.

பின் மயில் வீட்டில எல்லாரும் எப்புடி இருக்காங்க என்று விசாரிக்கிறார். மேலும் விவாகரத்து வேணாம் என்று ஏதும் சொன்னாங்களா என்று கேட்கிறார். அதனை அடுத்து மீனா எங்ககிட்ட தன்னும் உண்மையை சொல்லியிருக்கலாம் என்கிறார். அதைக் கேட்ட மயில் பெத்தவங்க பேச்சைக் கேட்டு என்ர வாழ்க்கை இப்புடி மாறிடுச்சு என்கிறார்.
பின் மீனா கொஞ்ச நாள் அவங்கள தனியா விடுங்க எல்லாம் சரியாகிடும் என்கிறார். மறுபக்கம் பாண்டியன் சரவணன் கிட்ட நாம எந்த தப்பும் பண்ணல தலை குனிந்து நிக்காத என்று சொல்லுறார். அந்த நேரம் பார்த்து சக்திவேல் பாண்டியன் கிட்ட வம்பிழுத்துக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த சரவணன் கோபப்படுறார்.

இதனைத் தொடர்ந்து கோமதி கதிரைப் பார்த்து இவள் ஏன்டா இப்புடி எல்லாம் பொய் சொல்லி ஏமாத்திட்டாள் என்கிறார். மேலும் இத்தனை பொய் சொல்லிட்டு எப்புடி அவள் நிம்மதியா இருப்பாள்.. இனி சரவணனோட வாழ்க்கை இப்புடியே முடிஞ்சிடுமா.? என்று சொல்லி அழுகிறார். அதுக்கு கதிர் நாம எப்புடியாவது அண்ணா வாழ்க்கையை சரி செய்திடலாம் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!