பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி சுகன்யாவைப் பார்த்து நீ எதுக்கு எங்க வீட்டுப் பக்கம் வாறதே இல்ல என்று கேட்க்கிறார். அதுக்கு சுகன்யா என் புருஷன வரக் கூடாது என்று சொன்ன இடத்துக்கு நான் மட்டும் எப்புடி வரமுடியும் என்று கேட்க்கிறார். அதைக் கேட்ட பழனி என் பொண்டாட்டி, சின்ன அண்ணா இவங்க ரெண்டு பேரும் சத்தம் போடாமல் இருந்தால் இண்டைக்கு எந்த பஞ்சாயத்தும் வராது என்கிறார்.

பின் கோமதி அது ஏதோ ஒரு கோபத்தில என்ர தம்பியை பேசிட்டன்...என் கோபம் எல்லாம் ஒரு நாள் தான் உனக்குத் தெரியாத என்று கேட்க்கிறார். அதைத் தொடர்ந்து ராஜி அம்மாவுக்கும் சித்திக்கும் வீட்டை சுத்திக் காட்டுறார். பின் வடிவு ராஜியைப் பார்த்து நீ நல்லா இருக்கியா என்று கேட்க்கிறார். அதுக்கு ராஜி நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன் என்று சொல்லுறார்.
அதனை அடுத்து காந்திமதி சரவணன் வீட்டு ஆட்கள் எல்லாம் திரும்ப பிரச்சனை ஏதும் பண்ணுறாங்களா என்று கேட்க்கிறார். அதுக்கு கோமதி இனி என்ன அவங்களால பண்ண முடியும் என்கிறார். அதனைத் தொடர்ந்து சக்திவேல் செந்திலைப் பார்த்து வேலை எல்லாம் எப்புடி போகுது என்று கேட்க்கிறார். அதுக்கு சூப்பரா போகுது என்கிறார் செந்தில்.

பின் எல்லாரும் ஒன்னா போட்டோஸ் எடுத்து சந்தோசப்படுறாங்க.... அதைத் தொடர்ந்து சக்திவேல் பாண்டியனைப் பார்த்து பொண்ணு எடுக்கிறதுக்கு முன்னாடி ஒழுங்கா விசாரிச்சு எடுத்திருக்கணும் என்று சொல்லுறார். அதுக்கு கதிர் அப்பா விசாரிச்சு தான் பெண் எடுத்தவர் என்கிறார். பின் எல்லாரும் ஒன்னா இருந்து சாப்பிடுறார்கள்.... இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!