சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா கொடுத்த சாப்பாட்டை முத்து சாப்பிடும் போது மீனாவை நினைத்துப் பார்த்து கவலைப்படுறார். இதனை அடுத்து மீனா தன்னோட வேலை செய்யுற ஆட்களோட ரோட்டில நிக்கிறதை பார்த்த உடனே முத்து காரை நிறுத்துறார். பின் மீனா முத்துவை பார்த்தவுடனே எதுவும் கதைக்காமல் அமைதியாக நிற்கிறார். அதனை தொடர்ந்து மீனா தன்னோட வேலை செய்யுற ஆட்களை கூட்டிக் கொண்டு முத்துவின்ர காரில ஏறி போறார்.
அப்ப முத்து எல்லாருக்கும் நான் தான் கெட்டவனா தெரியுறேன் என்கிறார். அதைக் கேட்ட மீனாவோட வந்த பொம்பிள அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ மீனாவுக்கு புருஷனாக கிடைக்க அவள் கொடுத்து வச்சிருக்கணும் என்கிறார். மேலும் எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் சண்டை வரத்தான் செய்யும் என்று சொல்லுறார். பின் மீனாவ முத்து காரில இருந்து இறக்கிவிடுறார். அப்ப மீனா முத்து தன்னை வீட்ட கூப்பிடமாட்டாரா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து ரோகிணியும் மனோஜும் ஷோரூமில ரொமான்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து மனோஜ்கிட்ட ஏதாவது வேலை இருக்கா என்று கேட்டு ரெண்டு பேர் வந்து நிக்கிறார்கள். அப்ப ரோகிணி இவங்கள எங்கட வீட்டில வேலை செய்ய கூட்டிட்டுப் போவோம் என்கிறார். அதைக் கேட்டு அவர்கள் சந்தோசப்படுறார்கள்.
பின் விஜயா அண்ணாமலை கிட்ட சமைக்கவும் ஆட்கள் இல்ல என்று சொல்லி புலம்புறார். அதுக்கு அண்ணாமலை வீட்டில ஆட்கள் இல்ல என்று தெரியும் போது தான் உனக்கு மீனாவோட அருமை தெரியும் என்கிறார். அதனை அடுத்து ரோகிணி வீட்டில சமைக்கிறதுக்காக ஆட்களை கூட்டிக் கொண்டு வந்திருப்பதை பார்த்து விஜயா ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!