• Jan 18 2025

உங்களுக்கு பொண்ணு பிரிஞ்சு போனது வருத்தமா? யாரும் எதிர்பார்க்காத பதிலை சொன்ன ரோபோ சங்கர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

பிப்ரவரி  24ஆம் தேதி ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கும் அவர் தத்தெடுத்து வளர்த்த கார்த்திக் என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த திருமண கொண்டாட்டம், ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் பிரம்மாண்டமாக, ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருந்தார்  ரோபோ சங்கர்.

இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு ரோபோ சங்கர் குடும்பம் வழங்கிய இன்டர்வியூ வைரலாகி உள்ளது. 


அதில், திருமணத்திற்கு பிறகு உங்கள் மகள் இந்திரஜா மறுவீட்டுக்கு போனது உங்களுக்கு கவலையாக இல்லையா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோபோ சங்கர், மறுவீடு இல்லை. பக்கத்து வீடு.

காலையிலையே அப்பா 2 பால் பாக்கெட் என்று கத்தும், பிறகு நைட்ல எனக்கும் 2 பார்சல்என்று சத்தம் வரும் என கூறியுள்ளார் ரோபோ சங்கர். இவ்வாறு திருமணமான இந்திரஜா தனது அம்மா வீட்டுக்கு அருகிலையே குடிபுகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement