• Sep 20 2024

இரவின் நிழல் திரைப்படத்தின் ”மாயவா தூயவா” என்னும் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்களில் முக்கியமானவர் தான் பார்த்திபன். இவர் புதிய பாதை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார்.

இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்திய தேசிய விருதையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்து தான் காணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்தும் உள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அத்தோடு தமிழ் சினிமாவில் முதன்முறையாக இந்த படம் 100 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

இதன் டீசர் சில நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ”மாயவா தூயவா” என்ற இந்த பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இதனை ரசிகர்கள் பார்வையிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement