தனி முயற்சிகளால் இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருந்த நடிகர் தனுஷ், பாலிவுட்டில் தன்னுடைய வலுவான நிலையை நிரூபித்திருக்கிறார். க்ரீத்தி சனோன் இணைந்து நடித்துள்ள அவருடைய சமீபத்திய ரொமான்டிக் படம் “தேரே இஷ்க் மே”, கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ஆரம்ப நாளிலிருந்தே படம் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனுஷ் – ஆனந்த் எல் ராய் – ஏ.ஆர். ரஹ்மான் என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பது படத்திற்கு வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இயக்குநர் ஆனந்த் எல் ராய் தனது படங்களில் காதல் மற்றும் மனித உறவுகளை சிறப்பாக சித்தரிப்பவர். “தேரே இஷ்க் மே” படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

படத்தில் தனுஷ் உணர்ச்சிவசப்பட்ட, தீவிரமான காதலனைப் போல தோற்றமளிக்கிறார். க்ரீத்தி சனோனுடன் அவருடைய chemistry ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மானின் இசை – படத்தின் உயிர் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் 5 நாட்களில் 93 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் இனி வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வசூலிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
Listen News!