• Dec 09 2025

பிக்பாஸில் முகம் சுளிக்க வைத்த அரோரா, FJ.. கடுப்பில் வியானா செய்த காரியம்?

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி  இவ்வளவு புகழ் பெற காரணமே அதில் கலந்து கொள்ள போட்டியாளர்களும், அங்கு  விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தான்.  அதிலும் இந்தி  பிக் பாஸில்  அதிக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசன் நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன. அதே சமயம் முகம் சுளிக்க வைக்கும் பல காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

இதுவரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகளை விட இந்த சீசனில் காதல், நட்பு போன்ற காட்சிகள் குறைவாக உள்ளது. ஆனால் காதல் என்ற போர்வையில் பல முகம் சுளிக்க வைக்கும் செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றன. 

இதில் கலந்துகொண்ட போட்டியாளரான  FJ, ஆரம்பத்தில் ஆதிரையுடன் நெருங்கி பழகினார். இவர்களுடைய செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால் ஆதிரை வெளியேற்றப்பட்டார்.  

அதற்கு பின்பு  FJ, வியானாவுடன் நெருங்கி பழகினார்.  இந்த ஜோடி  தனிமையிலேயே தங்களுடைய நேரத்தை செலவிட  தொடங்கியது. இதனை விஜய் சேதுபதியும் கண்டித்தார்.


இதற்கிடையில், யாரும் எதிர்பார்க்காத வகையில்  ஆதிரை மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே சென்றார். இது அவர்கள் இருவருக்கும் பேரிடியாக அமைந்தது. 

இன்னொரு பக்கம் கமருதீன், பார்வதிக்கு இடையில்  சுற்றி திரிந்த அரோரா அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது  FJ பக்கம் ஐக்கியமாகியுள்ளார். இது வியானாவுக்கு  தலையிடியாக மாறி உள்ளது. 

இந்த நிலையில், தற்போது வெளியான பிக் பாஸ்  ப்ரோமோ ஒன்றில்,  அரோராவை கட்டிப்பிடித்து தூக்கி  பாட்டு பாடி டான்ஸ் ஆடுகின்றார்  FJ .  இதை பார்த்த வியானா கடுப்பில் அவர் அருகில் சென்ற போதும் அதனை கண்டு கொள்ளாமல் அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்தவாரே  பாட்டு பாடி கொண்டிருந்தனர். 

வியானா அவர்களுக்கு இடையில் புகுந்து  நிற்கவும், அவரையும் நிற்க வைத்து பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக தங்களுடைய  ஆடல் பாடலை கண்டினியூ பண்ணுகின்றார்கள். இதனால் கடுப்பான வியானா அங்கிருந்து செல்லுகின்றார். 

இதை பார்த்த ரசிகர்கள்,  ஏற்கனவே துஷாரை வெளி அனுப்பி விட்டார் அரோரா.  அதற்குப் பிறகு கமருதீன்,  இப்போது கிடைத்த பலி ஆடு  FJ தான் என்று  அரோரா மீது தமது  விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 


Advertisement

Advertisement