• Apr 16 2026

மனைவியுடன் தன் வீட்டுக்கு வந்த ரவி- முத்துவுக்கு எதிராக விஜயா செய்த சூழ்ச்சி- அண்ணாமலை எடுத்த முடிவு-Siragadikka Aasai Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஸ்ருதியின் அம்மா போன் பண்ணி நாளைக்கு ஸ்ருதியையும் ரவியையும் உங்க வீட்டில கொண்டு வந்து விடுகின்றோம். ஆனால் முத்து அங்க இருக்கக்கூடாது என்று சொல்கின்றார்.


முத்துவுக்கு சாப்பாடு கொடுத்து விஜயா சீக்கிரமாக முத்துவை அனுப்பி வைக்கின்றார். இருந்தாலும் முத்து வயிறு சரி இல்லை என்று மீண்டும் வீட்டுக்கு வந்து ரூமுக்குள் போய்விட விஜயா கதவைப் பூட்டி விடுகின்றார்.

அந்த நேரம் பார்த்து ரவி வந்து அண்ணாமலையின் காலில் விழ முத்து வீட்டை விட்ட போடா எனத் துரத்த அண்ணாமலை, அமைதியாக இரு என்று சொல்ல முத்து, இவங்கள வீட்டில சேர்க்கக் கூடாது என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement