• Jan 18 2025

முடிஞ்ச அளவு பண்ணிட்டேன்,உங்க வீட்டுப் பையாக நினையுங்க,- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ப்ராவோ என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், முதல் நாளே 18 போட்டியாளர்கள் ஆட்டம், பாட்டத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தனர்.

 இதை தொடர்ந்து, முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் நடத்தப்பட்டது.அடுத்தடுத்த வாரங்களில், போட்டியாளர்கள் மக்களின் வாக்கு அடிப்படையில் வெளியேற்றப்பட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் இருந்தபோது, அதிரடியாக அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, ப்ராவோ, அன்ன பாரதி, ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்டாக உள்ளே நுழைந்தனர். 


வந்த ஒரு வாரத்தில் அன்ன பாரதி வெளியேறினார். கடந்த வாரம் கானா பாலா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் நேற்றைய தினம் விஜே ப்ராவோ வெளியேறியிருந்தார்.பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து போட்டியாளர்களுடன் நல்ல நட்பில் பழகி வந்த இவர் திடீரென வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருந்தது. 

இப்படியான நிலையில் ப்ராவோ, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியறியவுடன் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, நான் முடிஞ்ச அளவு உங்களை இம்பிரஸ் பண்ணுவதற்காகவும் உங்க வீட்டுப் பையனாகவும் நான் நானாக இருந்து விளையாடவுமே இந்த வீட்டுக்குப் போனேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement