• Nov 23 2024

ரவீனா - மணி காதலுக்கு எதனால் எதிர்ப்பு தெரியுமா? சற்றுமுன் வெளியான காரணம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக பங்குபற்றியவர்கள் தான் மணி, ரவீனா. இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வர முதலே பிரபலமான ஜோடியாக விஜய் டிவியில் வலம் வந்தார்கள்.

மணி வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராபி பண்ணி கொடுப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார். இதன் காரணமாக தான் ரவீனாவும் மணியை  சந்தித்து, அவரிடம் கொரியோகிராபி கத்துக்குறாங்க..


அதுக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து ரீலிஸ் போட, அது வேற லெவலில் ரீச் ஆகியுள்ளது. இதனை பார்த்த பலபேர் நீங்க லவ் தானே பண்ணுறீங்க என கேட்கவும் இல்லை என மறுத்து, ரகசியமாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனாலும், ரவீனா தனது வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள், துயரங்கள் என அனைத்தையும் மணியிடம் பகிர்ந்துள்ளார். அத்துடன், இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ வெளியிடுவதை நமது பெற்றோரும் பார்த்து இருப்பாங்க தானே, அப்போ அவங்களுக்கும் சம்மதம் என நினைத்துக் கொண்டு தமது காதலை தொடர்ந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்றனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்த ரவீனாவின் உறவினர் , ரவீனாவிடமும் மணியிடமும் சரமாரியாக கேள்விகளை கேட்டு இருவரையும் கிழித்து தொங்க விட்டுள்ளார். 

இந்த நிலையில், இவ்வாறு ரவீனா மணியின் காதலுக்கு எதனால் எதிர்ப்பு வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரவீனா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தால் அவருக்கு நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் எனவும், அதனால் அவர் பெரிய நடிகை ஆவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அவரின் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

எனினும், அவர்கள் பிக் பாஸ் வீட்டில் செய்யும் காதல் சேட்டைகளை பார்த்து அவர்கள் மனமுடைந்து விட்டனர்.

இவ்வாறான நிலையிலேயே, ரவீனாவின் பெற்றோர் தமது மகளின் எதிர்காலத்துக்காக அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர்கள் வெளியே வந்ததும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement