• Aug 23 2025

திரைக்கு வர முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரியுமா? "குபேரா" BTS காட்சியைப் பகிர்ந்த ராஷ்மிகா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ராஷ்மிகா. வசூலில் வசீகரம், இன்ஸ்டாகிராமில் மக்கள் மனங்களைக் கவர்தல் என இரு கோணத்திலும் முன்னேறி வருகின்றார்.


சமீபத்தில் வெளியான "குபேரா" திரைப்படத்தில், தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி, வசூலில் நல்ல ஆரம்பத்தைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தின் BTS (Behind The Scenes) புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா ஒரு அழகான, ஆனால் வித்தியாசமான பெண்ணாக நடித்துள்ளார். ஒரு சிக்கலான கதைக்குள் மாட்டிக்கொள்ளும் அவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


ராஷ்மிகா பதிவிட்ட புகைப்படங்கள், திரையில் காணும் காட்சிகளுக்கு மாறாக, மிக இயல்பான, மகிழ்ச்சியான தருணத்தை பிரதிபலிக்கின்றன. இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே தனி உற்சாகத்தை ஏற்படுத்தி, "இந்த படத்திற்கு பின்னால் இப்படிப்பட்ட அனுபவமா?" என்ற உணர்வை தூண்டியுள்ளது.

Advertisement

Advertisement