• Aug 02 2025

மோசமான ரிவ்யூவிற்கே இவ்வளவு வசூலா.? பாக்ஸ் ஆபிஸில் கெத்துக் காட்டிய "குபேரா"..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த "குபேரா" படம், கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த திரைப்படம், இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவான முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. திரைப்படம்  முதல் நாளே, உலகம் முழுவதும் ரூ. 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தொழில்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனுஷ் நடிப்பில், ஒரு சாதாரண நபர் எப்படி பணத்தின் சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறார் என்பதை இயக்குநர் அழுத்தமாகவே பேச முயற்சித்துள்ளார். இயக்குநர் சேகர் கம்முலா எப்போதும் கதையின் மென்மை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர். குபேரா படத்திலும் அவர் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.


ஆனால், இந்த முறை அவர் அதிக நேரம் எடுத்ததாகவே ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். படம் சற்று மெதுவாக நகர்கிறது என்பதோடு, சில இடங்களில் திரைக்கதைக்கு தேவையான உச்சக்கட்டம் இல்லாமல் இருந்ததாகவும் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement