தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகை ராஷ்மிகா, தனது புதிய முயற்சியான "மைசா" படத்தின் போஸ்டரை இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த போஸ்டரில் ராஷ்மிகா புதிய மற்றும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகின்றார். தனது முந்தைய பிம்பங்களை முற்றிலும் மாற்றி, அட்டகாசமான லுக் ஒன்றில் காட்சியளித்துள்ளார். அவரது அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
இந்த போஸ்டரை பகிர்ந்தபோது, ராஷ்மிகா தனது ரசிகர்களிடம் பேசும் விதமாக, ஒரு உருக்கமான உரையையும் வெளியிட்டுள்ளார். அதில், "I always try to give you something new… something different… something exciting…And this… This is one of those..." என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போஸ்டர் வெளியாகியதையடுத்து, சினிமா வட்டாரங்களில் சில முக்கியமான தகவல்கள் வெளிவருகின்றன. சிலர் இப்படம் ஒரு ஆக்ரோஷமான திரில்லராக அமைந்திருக்கலாம் எனத் தெரிவித்துவருகின்றனர். இந்த தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றன.
Listen News!