• Oct 14 2026

‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தால் ராஷ்மிகா எடுத்த முடிவு.! குவியும் பாராட்டுக்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

திரையில் ஏற்று நடித்த கதாபாத்திரம் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தால், நிஜ வாழ்க்கையிலும் பல குடும்பங்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் மேற்கொண்டுள்ள மனிதநேயமிக்க செயல் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, ‘ரணபலி’ திரைப்படத்தில் தான் ஏற்று நடித்த ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கத்தால், 400 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

இதன்படி, 400 குடும்பங்கள் மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை அவர் வழங்கியுள்ளார். அரிசி, கோதுமை மாவு, கேழ்வரகு உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசியப் பொருட்கள் இந்த உதவியில் இடம்பெற்றுள்ளன.

பொதுவாகத் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது வழக்கம். ஆனால், ராஷ்மிகா மந்தனா தனது கதாபாத்திரத்தின் தாக்கத்தை நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுத்தி, நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உதவியிருப்பது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இது தொடர்பாகத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராஷ்மிகா, உதவி செய்வதற்குப் பெரிய தொகையோ அல்லது மிகப்பெரிய முயற்சியோ தேவையில்லை என்றும், சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement