• Apr 19 2026

மகள் கையில் பிரெக்னன்சி கிட்.. இரண்டாவது முறை அப்பாவாகப்போகும் ரன்வீர் சிங்!

shali / 3 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான மகிழ்ச்சியான செய்தியால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள அவர், நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘துவா படுகோன் சிங்’ என்று பெயர் சூட்டப்பட்டு, அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குடும்ப வாழ்க்கையையும், தொழிலையும் சமநிலையுடன் முன்னெடுத்து வந்த இந்த ஜோடி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், தீபிகா படுகோன் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை அறிவிக்கும் வகையில், இவர்களது மகள் பிரெக்னன்சி கிட் உடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இந்த அழகான தருணம் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தீபிகா – ரன்வீர் தம்பதியின் குடும்பத்தில் மேலும் ஒரு புதிய வரவு சேர உள்ளதால், அவர்களது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement