• Jun 28 2026

விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கிய ஆர்யா-கௌதம் கார்த்திக் கூட்டணி - எகிறிய 2-வது நாள் வசூல்!

shali / 2 months ago

Advertisement

Listen News!

Mr. X திரைப்படம் ஆர்யா மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் சரத்குமார், மஞ்சு வாரியர், ரைசா விலசன், அதுல்யா ரவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான கருத்துக்களை பெற்று வருகிறது. இதன் காரணமாக, முதல் நாள் வசூல் மிக அதிகமாக இல்லாமல் ரூ.65 லட்சமாக மட்டுமே இருந்தது. எனினும், இரண்டாம் நாளான சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் வருகை சற்றே அதிகரித்தது. அதன் விளைவாக, படத்தின் வசூலும் உயர்ந்து ரூ.75 லட்சம் வரை சென்றுள்ளது.

இரண்டு நாட்களைச் சேர்த்து பார்த்தால், ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் இந்திய அளவில் ரூ.1.36 கோடி வசூலை பெற்றுள்ளது. இது ஒரு மெதுவான தொடக்கமாக இருந்தாலும், வார இறுதி நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் கணிக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், குடும்ப பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருகை தரும் எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இப்படத்தின் வசூல் மேலும் உயருமா என்ற கேள்வியும் தற்பொழுது எழுந்துள்ளது. 

Advertisement

Advertisement