இந்திய சினிமாவில் தனித்துவமான அடையாளத்துடன் பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், அவரது சூப்பர் ஹிட் திரைப்படமான ‘படையப்பா’ டிசம்பர் 12ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணம் மற்றும் அவரது 75வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த ரீ-ரிலீஸ் அமைந்திருந்தது.

ரீ-ரிலீஸுக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் தனது திரைப்பயணத்திற்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
1999ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’, தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்பட்டது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில்,வெளியான இந்த படம், ரஜினிகாந்தின் மாஸ் இமேஜை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. வெளியான போது மட்டுமல்லாமல், இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ள இப்படம், ரீ-ரிலீஸிலும் அதே மேஜிக்கை நிரூபித்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பல திரையரங்குகளில் ‘படையப்பா’ ரீ-ரிலீஸுக்கு ரசிகர்கள் திரண்டு வருவதைக் காண முடிகிறது. இந்த நிலையில், ‘படையப்பா’ படத்தில் மறக்க முடியாத நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன், படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Listen News!