• Jan 26 2026

அம்மா சத்தியமா நான் எதுவுமே பண்ணல.! நெற்றியில் அடித்த கமருதீன்.. வெடித்த பூகம்பம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது.  இந்த வாரம் இறுதியாக டவுள் எவிக்சன் நடைபெற்றது.

ஆதிரையும்  எப்ஜேயும் எலிமினேட் ஆகி வெளியே சென்று இருந்தனர். மேலும் ஆதிரையின் வீட்டார் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திற்கு வர இருந்த நிலையில்  தனக்கு கிடைத்த சான்ஸை பார்வதிக்கு விட்டுக் கொடுத்துச் சென்றார். 

இந்த நிலையில்,  பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ  சற்று முன் வெளியாகி உள்ளது. அதில்  இதுவரை காதல் ஜோடிகளாக  வலம் வந்த  பார்வதிக்கும் கமருதீனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி  பார்வதி, கமருதீன், அமீர்  மற்றும்  கானா வினோத் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும்போது,  மறுபடியும் தனக்கு பார்வதி ஆப்பு வைத்து விட்டு விடுவாரோ என பயமாய் இருக்கின்றது  என்று கமருதீன் அமித்திடம் சொல்லுகின்றார். 

மேலும் ஏற்கனவே  வாட்டர் மெலன் திவாகரின் பேச்சைக் கேட்டு  என் பெயரை  நாரடிச்சுட்டா.. பேட் டச் பண்ணதாக  சொன்னா.. ஆனால் நான் எதுவுமே பண்ணல.. அம்மா சத்தியமா நான் எதுவுமே பண்ணல  என்று கையிலயும்  நெற்றியிலையும் அடித்து சத்தியம் பண்ணி உள்ளார் கமருதீன்.


இதை பார்த்த பார்வதி, என்னென்னமோ பண்ணுறான்..  என்று அமித்திடம் புலம்புகின்றார்.  மேலும் ஃபேமிலி வாரத்துக்காக அவன் திரும்பவும் அதை கொண்டுவாரன் என்று பார்வதி சொல்ல, நான் அதற்காக பண்ணவில்லை.. நீ மூடிக்கொண்டு இரு என்று சைகையால் காட்டுகின்றார்.  

இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.  எனவே இதைப் பார்த்த ரசிகர்கள் இதை கேக் வெட்டி  கொண்டாட வேண்டும் என்று  தங்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். 


 

Advertisement

Advertisement