• Apr 27 2024

மனைவியின் வளைகாப்பை பிரமாண்டமாகக் கொண்டாடிய ராம் சரண்- யாரெல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?-வைரலாகும் போட்டோஸ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், சிறுத்த என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதால், திரைப்படங்களின் கதைகளில் அதிக கவனம் செலுத்தி தேர்வு செய்ய துவங்கினார். அந்த வகையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'மகதீரா' திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்தது.


தெலுங்கு திரையுலகை தாண்டி தமிழிலும், டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் இங்கும் வசூலில் மாஸ் காட்டியது. தந்தை ஒரு, சூப்பர் ஸ்டார் என்றாலும் ராம் சரண் தெலுங்கு திரையுலகில் தனக்கான பாதையை உருவாக்கி அதில் வெற்றிநடை போட்டு வருகிறார்.இவர் திரையுலகில் அறிமுகமாகி 16 வருடங்கள் ஆகும் நிலையில், இதுவரை 16 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.


 குறிப்பாக கடந்த ஆண்டு, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான 'RRR' திரைப்படம் 1000 கோடி வசூல் சாதனை படைத்தது.அதே போல் இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. மேலும்,இந்த படத்திற் தொடர்ந்து தற்போது ராம் சரண் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'RC 16' படத்தில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் ராம் சரண் மனைவி உபாஸனாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.ராம் சரண், கடந்த 2012 ஆம் ஆண்டு உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், சமீபத்தில் தான் உபாசனா கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement