• Jan 19 2025

திருமணமான நேரமா? கடனை சமாளிக்க முடியாமல் ரூ.350 கோடி சொத்தை விற்ற ரகுல் ப்ரீத் சிங் கணவர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்த நிலையில் திருமணமான சில மாதத்தில் அவருடைய கணவர் 350 கோடி ரூபாய் சொத்தை விற்பனை செய்து விட்டதாகவும் கடனை சமாளிக்க முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங் என்பதும், இவர் கடந்த சில ஆண்டுகளாக தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தான் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி தனக்கு சொந்தமான ரூபாய் 350 கோடி ரூபாய் சொத்தை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் தயாரித்த திரைப்படங்கள் அனைத்தும் ஓடாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் குறிப்பாக அக்ஷய் குமார் நடித்த ஒரே திரைப்படத்தில் மட்டும் 200 கோடிக்கு மேல் அவருக்கு நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.



இதனால் கடனை அடைக்க முடியாத நிலையில் இருந்ததால் மும்பையில் தனக்கு சொந்தமான 7 மாடி கட்டிடத்தை 350 கோடி ரூபாய்க்கு விற்று கடனை அடைத்து விட்டதாகவும் அந்த இடத்தில் அவருடைய அலுவலகம் இயங்கி வந்த நிலையில் தற்போது வேறு இடத்திற்கு அந்த அலுவலகம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது . அது மட்டும் இன்றி அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 80% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதெல்லாம் திருமணம் ஆன நேரமா என்று நெட்டிசன்கள் வதந்தி கிளப்பி வரும் நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஜாக்கி பக்னானி, தனது மனைவி ராசியானவர் என்றும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வந்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் அவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement