• Jun 24 2026

'தர்மன்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினிக்கு வைக்கப்பட்ட செக்!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அவரது 173வது திரைப்படத்திற்கு அதிகாரபூர்வமாக ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணி ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் நடைபெற்ற டைட்டில் அறிவிப்பு விழாவில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, “தர்மன் படத்தின் மூலம் இசையமைப்பாளர் அனிருத்துடன் முதல்முறையாக இணைகிறேன். இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த 8 பாடல்களும் வெவ்வேறு இசை வகைகளைச் சேர்ந்தவை. அனிருத்தின் இசை திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தும் படமாக இது அமையும்” என்று தெரிவித்தார்.

மேலும், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே ரஜினிகாந்தின் அறிமுகப் பாடல் காட்சியை படமாக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த தகவல் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் மாஸ் அறிமுக காட்சிகள் எப்போதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருப்பதால், ‘தர்மன்’ திரைப்படத்தின் இன்ட்ரோ பாடலுக்கான எதிர்பார்ப்பும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் இந்த படம் தொடர்பான செய்திகள் வேகமாக வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement