• Jun 24 2026

பேசினாலும் ப்ராப்ளம், சும்மா இருந்தாலும் ப்ராப்ளம்.! கமல் பற்றி ரஜினி வெளிப்படுத்திய உண்மை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அவரது 173வது திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வமாக ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக “தலைவர் 173” என தற்காலிகமாக அழைக்கப்பட்ட இந்த படம் தற்போது புதிய டைட்டிலுடன் ரசிகர்களை சந்தித்துள்ளது.

இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். தயாரிப்பு பொறுப்பை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் மேற்கொள்கிறார். டைட்டில் அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். மேலும், நடிகர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினியின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலையில், 'தர்மன்' பட டைட்டில் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில்,

நான் பேசினாலே ப்ராப்ளம், சும்மா இருந்தாலே ப்ராப்ளம்.. ரொம்ப நாள் கழிச்சு தெரிஞ்சுக்கிட்டேன் — நம்மள பிடிக்காதவங்களுக்கு நம்ம என்ன செஞ்சாலும் பிடிக்காது, பிடிச்சவங்களுக்கு என்ன செஞ்சாலும் பிடிக்கும். அதை நினைக்கிறதே மூட்டாளத்தனம் — ஜாக்கிரதையா இருக்கணும்..

கமல் சார் ஆபீஸ் ஓபனிங்லயே சொன்னாங்க — 'ரஜினி, ராஜ்கமலுக்கு ஒரு படம் பண்ணனும்'னு. அதுக்கப்புறம் இருவரும் பிஸி ஆயிட்டோம். சிவாஜிக்கு அப்புறம் பேசுன மாதிரி ஒரு சீரியஸான பேச்சு வந்தது — சரி, பண்ணலாம்னு சொல்லிட்டோம்..


ஆக்சுவலா பாத்தீங்கன்னா அஸ்வத் மாரிமுத்து நாலாவது டைரக்டர்.. ஃபர்ஸ்ட் ரவிகுமார் பிக்ஸ் பண்ணிருந்தோம் — சரியா ஸ்டிங் வரலன்னு ஆயிடுச்சு. சுந்தர்சி சாருக்கு வேற படம் இருந்தது, கொஞ்சம் நீளமாயிடுச்சு. சிவி சக்கரவர்த்தி கதை கேட்டு ரொம்ப நல்லா இருந்தது — பட் நியூக்ளியர் சயின்டிஸ்ட், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, வெப்பன்ஸ்னு ரொம்ப சென்சிடிவ் சப்ஜெக்ட். டைம் கன்ஸ்யூமிங்னு அத போஸ்ட்போன் பண்ணினோம். அப்பதான் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்துக்குள்ள வந்தாரு..

கமல் என்ன சொன்னாரு தெரியுமா — 'ரஜினி, நான் கதையும் கேட்க மாட்டேன், எதுவும் கேட்க மாட்டேன், எல்லாத்தையும் உங்ககிட்ட விட்டேன், நீங்க என்ன சொல்றீங்களோ அதை பண்ணுங்க'னு சொல்லிட்டாங்க.. அவ்வளவு பெரிய ஜாம்பவான் ஃபுல் ரெஸ்பான்சிபிலிட்டி போட்டுட்டாங்க — அதுதான் எனக்கு பெரிய டென்ஷன் ஆயிடுச்சு..

அதுக்கப்புறம் நான் போர்ஸ் பண்ணி, 'கமல் சார் கதை கேட்டு நீங்க ஓகேன்னு சொன்னா மட்டுமே நான் பண்றேன்'னு சொன்னேன். அவரும் பாத்துட்டு  'நல்லா இருக்கு'னு சொன்னாரு. அதுக்கப்புறம்தான் இந்த படம் ஆச்சு..


அஸ்வத் மாரிமுத்து மேல பெரிய ரெஸ்பான்சிபிலிட்டி இருக்குன்னு சொன்னாலும் , எல்லாத்தையும் அவர் தலையிலயே போட்டுட மாட்டோம். இது குரூப் ஒர்க், கம்பைன்ட் ஒர்க், டீம் ஒர்க், எல்லாரும் சேர்ந்து ஒன்லி சக்சஸ் நோக்குதான் உழைப்போம்..

கமல்கிட்ட என்னோட பிரண்ட்ஷிப் பத்தி எவ்வளவு சொன்னாலும் கம்மிதான். 75, 76, 77ல அவரு மிகப்பெரிய ஸ்டார் .. ஆனா நான் அப்பதான் புதுசா வந்தேன். இளமை மஞ்சராகும் படத்துல அவரே போன் பண்ணி 'ரஜினி, நான் டேட் அட்ஜஸ்ட் பண்ணிதான் பண்றேன், நீங்களும் வாங்க'னு சொன்னாரு. அவராலதான் அந்த படம் நான் பண்ணேன்..

கமல் சார் மாதிரி ஒரு ஆர்டிஸ்ட்டுக்கு , பணம் இது இதுன்னு இல்லை , சினிமா, சினிமா, சினிமா.. கிரியேட்டிவிட்டி, கிரியேட்டிவிட்டி.. அதுலதான் அவரு வாழ்க்கையே.. அவரோட கிரியேட்டிவிட்டிய சரியா புரிஞ்சு மகேந்திரன் மாதிரி ஒருத்தர் கிடைச்சாரு .. எனக்கு மிக மிக சந்தோஷம்.. 

இந்த படம் ராஜ்கமல்ல பண்றதுக்கு எனக்கு அவ்வளவு சந்தோஷம், அவ்வளவு ரெஸ்பான்சிபிலிட்டி.. கமல் சார் — படத்த அப்படியே விட்டுடாதீங்க, நீங்களும் இன்வால்வ்டா இருக்கணும். உங்க ஆசீர்வாதத்துல நாளைக்கு ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகுது — படம் நல்லா வரும்னு நம்பிக்கை இருக்கு, நல்லா வரணும் என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement