• Sep 19 2024

ரஜினி - நெல்சன் படத்தில் இணையும் முன்னணி கன்னட ஹீரோ!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகிய பலதிரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றாலும் இறுதியாக வெளியாகிய அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவரது 169 படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவதாகவும் அனிரூத் இப்படத்திற்கு இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பெப்ரவரி மாதமே வெளியாகியது.

தற்போது ஷூட்டிங் நடைபெறுவதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் நடிகைகளை இறுதி செய்யும் பணிகளையும் இயக்குநர் மும்முரமாக செய்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினி169 படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் விரைவில் நெல்சன் பெங்களூரு சென்று அவருடன் பேச இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இருப்பினும் அவர் படத்தில் நடிப்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும் என குறிப்பிடப்படுகின்றது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement