• May 10 2024

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் நல்ல விமர்சனங்கள் பெற்றுவருகின்றது

தமிழகம் முழுவதும் ரூ. 25 கோடிக்கு மேலாகவும், உலகம் முழுவதும் ரூ. 35 கோடிக்கு மேலாகவும் படம் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் படத்தின் புரொமோஷனுக்காக விக்னேஷ் சிவன் நிறைய பேட்டிகள் கொடுத்தார். அப்போது ஒரு பேட்டியில் அவர், படத்தில் கதிஜா வேடத்தை முதலில் த்ரிஷாவை நடிக்க வைக்க தான் கேட்டோம்.

ஆனால் அப்போது அவருக்கு வேறொரு பட கமிட்மென்ட் இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. எனவே தான் அடுத்து சமந்தாவை அணுகினோம் என்று குறிப்பிட்டார்.

த்ரிஷா கதிஜா வேடத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்குமென தெரியவில்லை, ஆனால் சமந்தாவின் சினிமா பயணத்தில் இந்த கதிஜா கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement