• May 10 2024

பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஸ்வக் சென் நடித்திருக்கும் படம் அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம். அந்த படத்தை விளம்பரம் செய்ய விஸ்வக் சென் ஒரு பிரான்க் வீடியோவை உருவாக்கினார். மேலும் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருக்கும் லக்ஷ்மண் தேகுமுடி விஸ்வக் கார் முன்பு வந்து படுத்தார்.

ஆதுனு் பின்னர் அர்ஜுனுக்கு திருமணம் நடக்காவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்று கையில் கேனுடன் மிரட்டினார். அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் தன் படத்தை விளம்பரம் செய்ய டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஸ்வக் சென். அவரை பேட்டி கண்ட தேவி நாகவள்ளியோ பிரான்க் வீடியோ பற்றி பேசி இருந்தார்.. மேலும் விஸ்வக் சென்னை பாகல் சென் என்றார். விஸ்வக்கின் மனநலம் சரியில்லை என்று தெரிவித்தார்.

மேலும் ஸ்டுடியோவை விட்டு வெளியே போங்க என்று சென்னிடம் தெரிவித்தார். அதை கேட்ட விஸ்வக் சென்னோ தகாத வார்பத்யதையை ன்படுத்தி, உங்களின் ஸ்டுடியோவுக்கு வர நான் ஒன்றும் துடிக்கவில்லை. நீங்கள் தான் அழைத்தீர்கள் என்றார்.

விஸ்வக் சென் பேசப் பேச தேவி அவரை திட்டி, வெளியே போகச் சொன்னார்.மேலும் தேவி தான் சண்டையை தூண்டிவிட்டது என்று பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் கெட்ட வார்த்தை பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார் விஸ்வக் சென்.

விஸ்வக் சென்னை கண்டித்து ஹைதராபாத் மேயர் விஜயலட்சுமி ட்வீட் செய்தார்.மேலும் மேயரின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ, டிவியில் நடந்த சண்டைக்கு தேவியும் காரணம். அவரை விட்டுவிட்டு விஸ்வக் சென்னை மட்டும் குறை சொல்ல வேண்டாம் என்கிறார்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement