• May 10 2024

பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.

இவ்வாறுஇருக்கையில் தமிழ் தெலுங்கு கன்னட படங்களில் பட்டையை கிளப்பி வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. 2019ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.


இதையடுத்து ஜார்ஜும், ஏமி ஜாக்சனும் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் ஏமி வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கிறதாம்.இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் எட் வெஸ்ட்விக்கும், ஏமி ஜாக்சனும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.

மேலும் Gossip Girl தொடரில் சக் பாஸாக நடித்து பிரபலமானவர் எட். லண்டனில் எட் வெஸ்ட்விக்கும், ஏமியும் ஜோடியாக நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவிட்டது.

This image has an empty alt attribute; its file name is 331779c4-emy.cinesamugam2.webp

கடந்த ஆண்டு டிசம்பரம் மாதம் சவுதி அரேபியாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் தான் எட் வெஸ்ட்விக்கும், ஏமியும் முதல் முறையாக சந்தித்தார்களாம். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்அவுக் ஆகிவிட்டது என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் குறிப்பிட்டார்.

ஏமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0 ஆகும். குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும், மகனுடன் உலகம் சுற்ற வேண்டும் என்று திட்டமிட்டார் ஏமி. மேலும் ஜார்ஜை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் திருமணம் நின்றுவிட்டது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement