• Jan 19 2025

பாக்கியாவை இன்னொரு கல்யாணம் பண்ணச் சொன்ன ராதிகா, கோபிக்கு இனியா கொடுத்த பதிலடி- சந்தோசத்தில் எழில்- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ராதிகா ரூமுக்குள் வந்ததும் கோபியைத் திட்டுகின்றார். உங்க முன்னாள் மனைவி என்ன பண்ணுறாங்க யார் கூட பேசிட்டு இருக்கிறாங்க என்றெல்லாம் நீங்க பார்ப்பீங்களா இருந்தால் எனக்கு இங்க என்ன வேலை எனச் சொல்லித் திட்ட அந்த நேரம் ஈஸ்வரி வந்து தாலி கட்டின புருஷனை இப்படியா திட்டுவ என்று கேட்கின்றார்.


அதற்கு ராதிகா, உங்க பையன் தேவையில்லாத விஷயம் எல்லாம் பேசுவார். அதற்கு நான் சர்ப்போட் பண்ணனுமா, தேவையான வேலைய மட்டும் பார்க்க சொல்லுங்க என்று சொல்கின்றார்.இதனால் ஈஸ்வரி வாயடைத்துப் போய் நிற்கின்றார். மறுபுறம் எழில் அமிர்தா, செல்வி ஆகியோருடன் இருந்து பாக்கியா பேசிக் கொண்டு இருக்கின்றார்.

அப்போது எழில் பாக்கியாவைப் பாராட்ட, பாக்கியாவும் எவ்வளவு நாள் தான் நானும் பொறுமையாக இருக்கின்றது என்று சொல்ல அமிர்தா, நல்ல வேளை அங்கிள் ராதிகாவை கல்யாணம் பண்ணினாரு, எப்பிடி பேசிறா பார்த்தீங்களா என்று கேட்க எழிலும் கான்டீனுக்கு நீங்க வரக்கூடாது என்று சொன்னாங்க,


இப்போ அவங்களே அம்மாவுக்கு சர்ப்போட் பண்ணுறாங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து இனியாவுடன் பேசும் கோபி தான் இனியாவுக்கு என்ன எல்லாம் செய்திருக்கிறேன் என்று நினைவுபடுத்துவதோடு தனக்கு ஏன் சர்ப்போட் பண்ணல என்றும் கேட்க இனியா நீங்க நல்ல அப்பா தான் ஆனால் அம்மா தான் எல்லாத்தையுமே அப்போ தனி ஆளாக பார்த்துக்கிறாங்க, நீங்க அவங்கள பற்றி பேசினது தப்பு என்று சொல்லிவிட்டு எழும்பி போகின்றார்.

தொடர்ந்து பாக்கியா கிச்சனில் இருக்கும் போது அங்கு வரும் வரும் ராதிகா பாக்கியாவிடம் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் தானே எத்தனை நாளைக்கு தான் தனியாக இருப்பீங்க, இப்போ தானே உங்களுக்கு சின்ன வயசு நீங்க பழனிச்சாமியை கூட கல்யாணம் பண்ணிக்கலாம் அது உங்க விருப்பம் என்று சொல்கின்றார்.


இதைக் கேட்ட பாக்கியா செல்வியை அழைத்து கல்யாணம் பண்ணின எல்லோரும் சந்தோசமாவாக இருக்கிறாங்க என்று கேட்க, செல்வி நான் மட்டுமில்ல யாருமே சந்தோசமாக இல்லை, கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம் என்று சொல்ல பாக்கியாவும் ராதிகாவிடம் நீங்க கல்யாணம் பண்ணி சந்தோசமாகவா இருக்கிறீங்க எனக் கேட்கின்றார்.

இதனால் ராதிகா பாக்கியாவிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு அந்த இடத்தை விட்டுப் போகின்றார்.தொடர்ந்து பாக்கியா தன்கூட ராதிகாவையும் சேர்த்துகிட்டா என்று ஈஸ்வரியுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.






Advertisement

Advertisement