• Mar 13 2026

தினேஷுக்கு எதிராக ரச்சிதா வெளியிட்ட திடீர் பதிவு! இதெல்லாம் ரொம்ப ஓவர்! ரசிகர்கள் அதிருப்தி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

'பிரிவோம் சந்திப்போம்' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான்  நடிகை ரச்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். 

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர். ஆனால் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.


கன்னடத்தில் படம் ஒன்றை நடித்து வருகிறார் ரச்சிதா.. குறித்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் காட்டப்படுகிறார்.

அதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் தினேஷ்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தினேஷ் இருக்க,  நடிகை ரச்சிதா போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 


அதன்படி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில விசித்திராவிற்கு தனது  ஆதரவை தெரிவித்து, பெண்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ரச்சிதா. 

பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது அதிகமாக தினேஷ் மற்றும் விசித்திராவிற்கு இடையே தான் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

இவ்வாறான நிலையில் ரச்சிதா விசித்திராவிற்கு ஆதரவு கொடுத்து இருப்பது  தினேஷ் மீது உள்ள கோபம் இன்னும் குறையவில்லை  என்பது வெளிப்படையாக தெரிகிறது.


Advertisement

Advertisement