• Jan 19 2025

கணேஷ் பற்றி வீட்டாருக்கு சொல்ல முயன்ற பாக்கியாவுக்கு அடித்த மற்றொரு அதிஷ்டம்! திடீரென பல்டியடித்த ஈஸ்வரி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், வாசலில் அங்குமிங்கும் செழியன் நடந்து கொண்டிருக்க, யாரு வர போறாங்க, உன்ட நண்பர்களா? என கோபி விசாரிக்க, இல்ல அம்மாவுக்காக காத்திட்டு இருக்கன் என செழியன் சொல்லுகிறார்.

இதையடுத்து, பாக்கியா வீட்டுக்கு வர செழியன் சந்தோஷத்தில் வரவேற்க, கோபி வழமை போலவே கிண்டல் செய்கிறார். ஆனாலும் கோபியின் அப்பா பாக்கியாவை விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறார்.


அந்த இடத்திற்கு ஈஸ்வரி வந்து, பாக்கியா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, உன்ன டிவியில பாத்தது என சொல்லி கண் கலங்குகிறார். இதை பார்த்து கோபி அதிர்ச்சியில் உள்ளே செல்கிறார். பாக்கியாவின் ஸ்வீட்டை வீட்டினர் சுவைத்து பாராட்டுகின்றனர்.

இதை தொடர்ந்து, பாக்கியா கணேஷ் சொன்னதை பற்றி நினைத்து, பழனிச்சாமிக்கு போன் போட்டு பேசுகிறார். பழனியும் நீங்க எழில் கிட்ட கணேஷ் விஷயத்தை சொல்லுறத தான் நல்லம் என சொல்லுகிறார். 

அதன்பின், தனது ரூம்க்கு வந்த எழிலிடம் கணேஷிடம் சூசனமாக சொல்ல முயல்கிறார். ஆனாலும் கணேஷின் கதையை வேறு ஒருவருக்கு நடந்தது போலவும், அதுக்கு என்ன செய்யலாம் எனவும் ஐடியா கேட்க, இப்படி எல்லாம் நடக்குமா? ஆனா அந்த பையன் தான் பாவம் என சொல்லிக் கொண்டு இருக்க, அமிர்தாவும், நிலாவும் அங்கு வந்து, நீங்க இல்லாம நிலா இருக்கிறா இல்ல என சொல்லுகிறார். எழிலும் நிலாவை கொஞ்சிக்கொண்டு சரி வா விளையாடுவம் என கூட்டிச் செல்கிறார்.


மறுபக்கம், செழியன் விஷயம் போல எழிலுக்கு ஏதும் நடக்க கூடாது, வீட்டுல எல்லார்கிட்டையும் சொல்லணும் என வீட்டார் முன்னிலையில் கணேஷ் விஷயத்தை சொல்ல ஆரம்பித்து, தயங்கி தயங்கி பேசுகிறார். இதை பார்த்த கோபி எனக்கு வேளைக்கு டைம் ஆகுது என கிளம்ப, அப்போ சாயங்காலம் சொல்லுறன். இது ரொம்ப முக்கியமான விஷயம் என்றார்.

அந்த இடத்திற்கு எழில் வந்து, அம்மா ஒரு குட் நியூஸ் என சொல்லி, தனது நண்பரின் அப்பா ரெஸ்டாரன்ட் விற்க போறாரு, வா உடனே போய் கதைப்பம் என பாக்கியாவை கையோடு அழைத்துச் செல்கிறார்.

அதன்படி, இருவரும் அங்கு செல்ல பழனிச் சாமியும் வருகிறார். அங்கு வந்த எழில் நண்பரின் அப்பா, ரெஸ்டாரன்ட்ல எல்லா சாமானும் இருக்கு, அட்வான்ஸ் இரண்டு லட்சம், வாடகை 60 ஆயிரம் என சொல்ல, பாக்கியா வாடகை கூட என ஜோசிக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement