• Apr 15 2026

ஒழுங்கா விளையாடுறியா? பிக் பாஸில் விக்ரமை அடித்து விரட்டிய விக்ரமின் தந்தை! அடக்கி வாசித்த அர்ச்சனாவின் பெற்றோர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 79 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது, பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்த நிலையில், அதில் உள்ளே வந்த மூன்றாவது  குடும்பமாக விக்கிரமின் அம்மா, அப்பா வருகை தந்துள்ளனர்.

அதன்படி, உள்ளே வந்தவிக்கிரமின் அப்பா எப்படிப்பட்ட மனுஷனா இருக்காருய்யா... என்று சொல்லும் அளவுக்கு பாரபட்சம் பார்க்காம மனசில பட்டது எல்லாம் வெளிப்படையா  பேசி இருக்காரு. பூர்ணிமாட அம்மாவும் சரி விக்ரம்ட  அப்பாவும் சரி வேற லெவல் பேசியுள்ளனர்.


மேலும், உள்ளே வந்த அர்ச்சனாவின் பெற்றோர், அர்ச்சனா வின்  பண்ணுறதுக்குரிய டிப்ஸ் எல்லாம் சொல்லி குடுக்கிறதிலேயே குறியா  இருந்தாங்க. அவங்க ரொம்ப அமைதியான குடும்பம் போல இருந்தாங்க.


ஆனாலும், விக்ரமிடம் பேசிய அர்ச்சனாவின் அப்பா, ஒரு விடயத்தை மட்டும் வெளிப்படையா பேசியுள்ளார். அதாவது, என்ட பொண்ணு அழும் போது நீயும் அக்ஸயாவும் கிண்டல் பண்ணி சிரிச்சிங்க அது ரொம்ப எனக்கு கஷ்டமா இருந்துச்சு...அப்பிடினு சொல்லியுள்ளார். அதேபோல நிக்சனிடமும் கவலையாக பேசியுள்ளார்.  விசித்திராவிடமும் என்ட பொண்ண நல்லா பார்த்துக்கிட்டீங்க.. என சொல்லியுள்ளார்.  

இதேவேளை, உள்ளே சென்ற விக்கிரமின் பெற்றோர், தன் மகனின் குறைகளையும், நிறைகளையும் சொல்லி பாராட்டியதோடு, விக்ரமுடன் கலகலப்பாக விளையாடியும் உள்ளனர்.  அதே நேரம்,  அர்ச்சனாவின் பெற்றோர்  நியாயத்தை கதைக்கவில்லை என்று வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement