• Jan 18 2025

பெயரை சொல்ல தைரியம் இல்லை! தன்மானம் பற்றி பேசுறாங்க! வறுத்தெடுக்கும் ரவீந்திரன்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சில் நடந்த கோளாறுகள் பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை சமூகவலைத்தளங்களில் பரவலாகவே மணி-பிரியங்கா சண்டை விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து பலரும் பலவாறு பேசிவரும் நிலையில் தற்போது திரைப்பட விமர்சகரும், தயாரிப்பாளருமான ரவீந்திரன் இந்த சம்பவம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார். 


பிரச்சினை என்னவென்று யாருக்கும் தெரியாது. தன் சுயமரியாதையை சமரசம் செய்து கொண்டு நிகழ்ச்சியை தொடர முடியாது என்று கூறிவிட்டு மணிமேகலை வெளியேறியுள்ளார். ஒரு வீடியோவில், அவர் பேசும்போது "முன்னாள் தொகுப்பாளர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதில் பிரியங்காவைப் பற்றி பேசுவது போல் தெரிகிறது. அதை ஏன் வெளிப்படையாகச் சொல்லக்கூடாது?


நான் பிரியங்காவிற்க்கு ஆதரவாக பேசவில்லை.  ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த எனது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் தனிப்பட்டதாக இருக்க விரும்பவில்லை. இருப்பினும், மணிமேகலை பிரியங்காவின் குணாதிசயங்கள் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கூட கேள்வி எழுப்பியுள்ளார்.


ஒரு ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து மணிமேகலை அறிக்கை வெளியிட வேண்டும். சுயமரியாதையை பற்றி பேச ஆரம்பித்தால் எந்த தயாரிப்பாளராலும் படம் எடுக்க முடியாது. எந்தத் தொழிலில் இது போன்ற பிரச்னைகள் இல்லை?


பிரியங்கா யார் என்று பிரியங்கா குடும்பத்தினருக்கு தெரியும், அவருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கும் பிரியங்கா தெரியும். இந்தச் சூழலை முதிர்ச்சியில்லாமல் கையாண்டிருக்கிறார் மணிமேகலை. இங்கு யாரும் மணிமேகலையின் குடும்பம் பற்றியோ, அவரது கடந்தகால வாழ்க்கையைப் பற்றியோ பேசவில்லை, ஆனால் தற்போது பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கையே விவாதப் பொருளாக மாறியுள்ளது என்று கூறினார். 


Advertisement

Advertisement