• Jan 19 2025

ராஷி கண்ணா வீட்டில் என்ன விசேஷம்? தடபுடலாக நடந்த பூஜை.. எத்தனை கோடி செலவு?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை ராஷி கண்ணா வீட்டில் நடந்த பூஜையின் புகைப்படம்  இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவரது வீட்டில் என்ன விசேஷம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ராஷி கண்ணா ’மெட்ராஸ் கஃபே’ என்ற இந்தி திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையானார். இதனை அடுத்து நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா ’அடங்கமறு’ ’அயோக்யா’ ’சங்க தமிழன்’ ’துக்ளக் தர்பார்’ ’அரண்மனை 3’ ’அரண்மனை 4’ ‘திருச்சிற்றம்பலம்’ ’சர்தார்’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ’மேதாவி’ என்ற தமிழ் படத்திலும் இரண்டு ஹிந்தி மற்றும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

 தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொடுக்கும் ராஷி கண்ணா சமீபத்தில் ஹைதராபாத்தில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கி அதற்கு கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளார். இது குறித்த பூஜை புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 நடிகை ராஷி கண்ணாவுக்கு சொந்த ஊர் டெல்லி என்றாலும் தென்னிந்திய திரைப்படங்களில் இனி அவர் கவனம் செலுத்த போவதாகவும் அதனால் ஹைதராபாத்தில் சொந்த வீடு வாங்கி இங்கே செட்டில் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement