• Jan 19 2025

பத்தினி லிஸ்டில் என்னை சேர்க்காதீர்கள்... ஓபன் டாக் கொடுத்த ரேகா நாயர்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் நடிகை ரேகா நாயர். இவர் வம்சம், பகல் நிலவு, நாம் இருவர், ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் நிலவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

சட்டென பேசும் இவர், பயில்வான் ரங்கநாதன் உடன் நடுரோட்டில் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகைகள் பற்றி விமர்சித்து வரும் பயில்வானுக்கு எதிராக தொடர்ந்தும் அவர் குரல் கொடுத்து வருகிறார். அத்துடன் பயில்வான் இறந்துவிட்டால்  பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் கூறியிருந்தார்.


இந்த நிலையில் அன்னையர் தினத்தில் தனது மகளுடன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் நடிகை ரேகா நாயர். அதன் போது அவர் கூறுகையில்,

எனக்கு இப்போது 38 வயதாகிறது. எனக்கு இருக்கும் தைரியம் என் மகளுக்கு 15 வயதிலேயே உள்ளது. நான் எந்த விதமான பிரச்சினைகளை சந்தித்தேன் என்பதை என் மகள் பார்த்துதான் வளர்ந்தாள். நான் பத்தாம் ஆண்டு படிக்கும்போதே எல்லா அவமானங்களையும் சந்தித்து விட்டேன்.


அதில் கிடைத்த அனுபவத்தை பார்த்து தான் என் மகளை வளர்த்தேன். இந்த சமூகத்தில் நடப்பதை எல்லாம் என் மகளிடம் கூறுவேன். மேலும், என்ன நடந்தாலும் என்னிடம் ஓப்பனாக சொல்லிவிடு, நீ யாரை காதலித்தாலும் கூட என்னிடம் சொல். நல்லவனாக இருந்தால் ஓகே சொல்லுவேன் இல்லையென்றால் கட் பண்ணிடுவேன் என தன் மகளிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏதாவது நல்லது செய்யப் போனா கூட அது பிரச்சினையாகின்றது. விஜே சித்ரா வழக்கில் இன்றுவரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளேன். அவரின் குடும்பத்தினர் கூட கோர்ட்டுக்கு போவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் நான் போய் கொண்டு தான் உள்ளேன் எனக்கு வலிக்கின்றது என்று சொன்னால் அதை பிரச்சனை என்கின்றார்கள். எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் கெட்ட பெண் என்கின்றார்கள். எனக்கு உங்களின் மரியாதையோ, அங்கீகாரமோ வேண்டாம்.  என்னை நீங்கள் பத்தினி லிஸ்டில் சேர்க்க வேண்டாம் எனக்கு கவலையே இல்லை எனக் கூறி  உள்ளார்.

Advertisement

Advertisement