• Jan 18 2025

வெளியாகிய அன்றே சாதனை படைத்த புஷ்பா 2 ட்ரெய்லர்! 2 மணித்தியாலயத்தில் எகிறிய மில்லியன்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் முன்னர் வெளியாகிய புஷ்பா 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதன் வெற்றியால் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது.


ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினாலும் சில பிரச்னைகளால் தாமதமானது. இதற்கிடையே, மூன்று முறைக்கு மேல் படத்தின் வெளியீட்டுத் தேதியும் மாற்றப்பட்டதால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது. இருபின்னும் இறுதியாக ஒரு திகதியை ஸ்ட்ரோங்காக லாக் செய்துள்ளது புஷ்பா 2 டீம்.


இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியானது. பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளது.


இறுதியாக, இப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுவரை, யூடியூபில் வெளியான புஷ்பா 2 ட்ரெய்லர் தெலுங்கில் 44 மில்லியன், ஹிந்தியில் 41 மில்லியன், தமிழில் 4.4 மில்லியன், கன்னடத்தில் 2 மில்லியன், மலையாளத்தில் 1.8 மில்லியன், பெங்காலியில்  5 லட்சம் என 100 மில்லியன் வரை டிரைலருக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 2 மணித்தியாலங்களில் 40 மில்லியனை கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.  





Advertisement

Advertisement