• Apr 15 2026

பிரதீப் பற்றிய கேள்விக்கு செருப்படி பதிலளித்த பூர்ணிமா! ஆவேசத்தில் பிரதீப் ரசிகர்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களின் பூர்ணிமா ரவியும் ஒருவராக காணப்பட்டார். கடந்த வாரம் இறுதியாக 16 லட்சம் அடங்கிய பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து கெத்தாக வெளியேறினார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பூர்ணிமா, கடும் பிசியாக தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், பிக் பாஸ் பூர்ணிமா சென்ற விழாவொன்றில் ரசிகர் ஒருவர் பிரதீப் ஆன்டனி பற்றி கேட்க, கடுமையாக விளாசியுள்ளார் பூர்ணிமா. தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.


அதன்படி, குறித்த விழாவில் பங்கேற்ற பூர்ணிமாவிடம், நீங்க பிரதீப் ஆன்டனி பற்றி என்ன நினைக்கிறீங்க என கேட்க, நான் எதற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என சொல்லியுள்ளார்.

மேலும், உங்களுக்கு இப்போ புரியாது. என்னை பற்றி மக்களுக்கு புரியும் போது எல்லாம் புரியும் என சொல்லியுள்ளார்.

தற்போது குறித்த வீடியோவை பிக் பாஸ் ரசிகர்கள் வைத்து செய்வதோடு, மறுபக்கம் பூர்ணிமா சரியான பதிலடி கொடுத்ததாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement