• Jan 19 2025

Bigg Boss Title Winner மாயாவுக்கு கிடைக்கலாம்.. அர்ச்சனா வேஸ்ட்டா? பிரதீப் பற்றியும் பேசி ஷாக் கொடுத்த விசித்ரா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் ஐம்பது வயதைக் கடந்த நடிகையாக காணப்படும் விசித்ரா, வெற்றிகரமாக 95 நாட்களைக் கடந்த பின்னே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசித்ராவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது. அவர் இறுதி வரை சென்று டைட்டில் வின் பண்ணுவதற்குரிய வாய்ப்பு இருப்பதாகவே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக வெளியேறினார் விசித்ரா.

இந்த நிலையில்,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதன்படி அவர் கூறுகையில்,


எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்குமே நன்றி. நான் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருப்பேன்னு நினைச்சு கூட பாக்கல. இதுவே எனது வெற்றி அப்படி என்று தான் நான் நினைக்கிறேன். இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

நான் வெளியே வந்ததற்கு அப்புறம் நிறைய பேர் என்னை பிக் பாஸ் வெளியே  அனுப்பியது unfair என்று எல்லாம் சொன்னீங்க. அந்த அளவுக்கு நான் மக்கள் மத்தியில் இருக்கேன் என்று நினைக்கும் போது அதுவே எனக்கு போதுமானது தான். 

எனினும், நான் வெளியே வந்ததற்கு பிறகு எல்லாருமே கேட்ட ஒரு கேள்வி யார் டைட்டன் வின் பண்ணுவாங்க? அப்படி என்று தான். எல்லாருமே சொல்றது அர்ச்சனா என்று தான். என்ன பொறுத்த வரைக்கும் மாயா வின் பண்ணினா நல்லா இருக்கும் என்று தோணுது. இது எனது தனிப்பட்ட கருத்து இல்ல. பிக் பாஸ் வீட்டில் இருந்த காரணத்தின் அடிப்படையில்தான் இதைச் சொல்றேன்.


பிக் பாஸ் வீட்டுல மாயா, வெளில கெட்ட பெயர் வாங்கினாலும் பரவால்ல, மக்களை சந்தோஷப்படுத்தினா போதும் என்று தான் கேம் விளையாடினாங்க.   அர்ச்சனா உள்ள வரும்போது, நல்லா ஒர்க் பண்ணிட்டு தான் பிக் பாஸ் உள்ள வந்து இருக்காங்க. மேலும், பிரதீப் விஷயத்தில் உரிமை குரல் எழுப்பினதால  அர்ச்சனாக்கு நிறைய சப்போர்ட் கிடைச்சது.

பிரதீப் விஷயத்துல நான் கூட சொன்னது, அவன்ன உள்ள வச்சு திருத்தி இருக்கலாம் என்றுதான். ஒருவேளை பிரதீப் இப்போ பிக் பாஸ் வீட்டுல இருந்து இருந்தா டைட்டில் வின்னருக்கான போட்டியில் பெரிய மாற்றம்  இருந்திருக்கும்.


அதன்படி இந்த சீசன்ல டைட்டில் வின்னர் ஆவதற்குரிய வாய்ப்பு அர்ச்சனா மற்றும் மாயாவுக்கு தான் இருக்குது. மாயாவ எடுத்துக்கொண்டா மாயா நெகட்டிவா காட்டி பிக் பாஸ் ஷோவ நல்லபடியா கொண்டு போறாங்க.

அர்ச்சனாவ எடுத்துக் கொண்டா, வெளில இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போதே நல்லா ரெடியாகி வந்திருக்காங்க. அதுக்கு ஏற்றமாதிரி கேம் விளையாடுறாங்க.

எது எவ்வாறு எனினும், நான் சொன்னாலும் சொல்லல என்றாலும் இதுல ஒருத்தர் தான் வின்னர், ரன்னர் ஆக வர போறாங்க என்று சொல்லியுள்ளார் விசித்திரா.

Advertisement

Advertisement