ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் நயன்தாராவை வைத்து அன்னபூரணி என்ற திரை படத்தை இயக்கியிருக்கிறார். படம் கடந்த மாதம் வெளியானது. கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்த அன்னபூரணி நயன்தாராவுக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்ற சூழலில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்த அவர் அறம் படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
ஜவான் படத்துக்கு பிறகு ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குநராக அறிமுகமான அன்னபூரணி படத்தில் நடித்தார் நயன். இது அவருக்கு 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த மாதம் வெளியானது. 75ஆவது படம் என்பதால் கண்டிப்பாக இப்படம் ஹிட் படமாக அமைய வேண்டும் என நினைத்திருந்தார் நயன்தாரா. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது.
கதையிலும் சில சிக்கல்கள் இருக்க அதோடு மிக்ஜாம் புயலும் வந்துவிட படம் பலமான அடி வாங்கியது. இதனையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் அன்னபூரணி படத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது அந்தப் படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருக்கும் நயன்தாரா; அசைவம் சமைப்பது போன்று இருக்கும்.
மேலும் க்ளைமேக்ஸில் பிரியாணி நன்றாக செய்ய வேண்டும் என்றால் தொழுகை செய்ய வேண்டும் போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை காவல் நிலையத்தில் படத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது
Listen News!