• May 23 2026

பிரியங்காவுக்குள் இப்படியொரு திறமையா? இன்ஸ்டாவில் லீக்கான வீடியோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ள தொகுப்பாளர்களில் முக்கியமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை உற்சாகமாகவும் நகைச்சுவையுடனும் தொகுத்து வழங்கி, ரசிகர்களின் பிரியமான முகமாக மாறியுள்ளார்.


இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்காவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவரது நேர்த்தியான பேச்சு, இயல்பான நடத்தை மற்றும் நகைச்சுவை உணர்வு ஆகியவை அவரை மற்ற தொகுப்பாளர்களிலிருந்து தனித்துவப்படுத்துகின்றன.

இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, பிரியங்கா தனது ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்றைஸையும் வழங்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தானே பாடிய ஒரு பாடல் வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது குரல் திறமை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தொகுப்பாளராக மட்டுமல்லாமல், பல்வேறு திறமைகளையும் கொண்டவர் என்பதையும் இந்த வீடியோ மீண்டும் நிரூபித்துள்ளது. 

Advertisement

Advertisement