• Jun 14 2026

கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக இருக்கும் ‘கருப்பா கூட வா’ பாடல்.. பாலாஜி ஓபன்டாக்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார்.


படத்தின் அறிவிப்பிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘கருப்பு’, கிராமத்து பின்னணியிலும் ஆன்மிக நம்பிக்கைகளையும் மையமாகக் கொண்டதாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சூர்யாவின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், “கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் ‘கருப்பா கூட வா’ பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது!” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடல் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இப்படத்தின் இசை மற்றும் கதை மீது எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement