கடந்த வாரம் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் மைக்கேல் தற்போது திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. உலகப் புகழ்பெற்ற பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்துள்ளார். அவரின் நடனம், உடல் மொழி, மேடை கவர்ச்சி ஆகிய அனைத்தும் மைக்கேல் ஜாக்சனை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக பாடல் காட்சிகளில் அவர் காட்டிய திறமை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெறும் 4 நாட்களில் உலகளவில் ரூ.2000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் மீது நிலவும் எதிர்பார்ப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு காரணமாக, வரும் நாட்களிலும் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் நீண்டநாள் திரையரங்குகளில் ஓடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!