• Oct 16 2024

பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரம்; பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்த கமல்ஹாசன்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7ல் அதிரடியான திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதீப் விவகாரத்தில் கமலும் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளாராம்.

இறுதியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதன்படி இறுதி வெற்றி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி உள்ளார் கமல்.

இதற்கு காரணம் பிரதீப் மீது அடுக்கடுக்காக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தான்.எனினும் இது கமல் முடிவு மட்டுமல்ல. பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்களின் முடிவும் தான்.


இந்த நிலையில், பிரதீப் விவகாரத்தில் கடுப்பான கமல்ஹாசன், அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சேனல் நிர்வாகத்திடம் முன்வைக்க முன், ஒரு வேளை அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிடலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

எனினும், பிக் பாஸ் டீமும் பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனக்கூறி பிரதீப்பை வெளியேற்றியுள்ளதோடு, தன்னையும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பயணிக்க வைத்துள்ளது என கமல்ஹாசனே நேற்றைய எபிசோடில் ஓப்பனாக பேசி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, பிக் பாஸ் வரலாற்றில் இரண்டாவது ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்படும் நபராக பிரதீப் உள்ளார். ஏற்கனவே மகத் இவ்வாறு அனுப்பப் பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement