தமிழ் சினிமாவில், 2025 தீபாவளியை முன்னிட்டு எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு ஏற்றவாறு ‘Dude’ எனும் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படம், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பிலும், கீர்த்திஸ்வரனின் இயக்கத்திலும் உருவாகி இருக்கிறது.
காதல், ஆக்ஷன், யூத் கலாச்சாரம் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘Dude’, இந்த தீபாவளிக்கு இளைய தலைமுறை ரசிகர்களின் மத்தியில் செம ட்ரெண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘Dude’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்றைய தினம் (அக் 9, 2025) வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுவதுடன், இவரின் வாழ்க்கையில் ஏற்படும் நகைச்சுவை மற்றும் காதல் சம்பவங்கள் கலந்த ஜாலியான தருணங்கள் ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இப்படத்தில் மமிதா பைஜு முக்கியமான கதாநாயகியாக களமிறங்க இருப்பதுடன் அவர்களுக்கிடையே உள்ள கெமிஸ்ட்ரி, ட்ரெய்லரிலேயே ஒரு ரொமான்ஸ் கிளாமரின் வலிமையை காட்டுகிறது.
Listen News!