• Jan 22 2026

பிரபாஸிற்கு இவ்வளவு தான் வரவேற்பா.? ‘தி ராஜா சாப்’ படம் மொத்தமா ஊத்திக்கிச்சு போலயே...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, உலகளாவிய அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘தி ராஜா சாப்’ திரைப்படம், கடந்த 9ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இயக்குநர் மாருதி இப்படத்தினை இயக்கியுள்ளார். 

இந்தப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து, மூன்று முக்கிய கதாநாயகிகள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் நடித்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் திரைப்படத்தில் தனித்துவமான கதாபாத்திரங்களில் நுழைந்து, கதையின் முழுமையை உயர்த்தியுள்ளனர்.


மேலும், சஞ்சய் தத், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு திரைப்படத்தை பல பரிமாணங்களில் மேலும் வலுப்படுத்தியுள்ளது. திரைக்கதையின் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் மற்றும் ஹீரோ-ஹீரோயின் இணைப்பு, ரசிகர்களை திரையரங்குகளில் இணைத்துள்ளது.

இந்நிலையில், இரண்டு நாட்களின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தகவல்களின் படி, உலகளாவிய அளவில் ‘தி ராஜா சாப்’ இரண்டு நாட்களில் ₹140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பிரபாஸிற்கு கிடைத்த மந்தமான வரவேற்பாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். 

Advertisement

Advertisement