• Jan 22 2026

பிக்பாஸ்-9 சான்ட்ரா இதுவரை பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா.? லீக்கான தகவல்கள்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை முழுமையாக கவர்ந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன், தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத திருப்பங்கள், எலிமினேஷன், டாஸ்க் என நிகழ்ச்சி பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, இந்த வாரம் போட்டியாளர் சாண்ட்ரா எலிமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


பிக் பாஸ் 9-ல் தற்போது வரை விக்ரம், சபரி, அரோரா, திவ்யா மற்றும் சாண்ட்ரா ஆகியோர் பைனலிஸ்ட் பட்டியலில் இருப்பதாக பேசப்பட்டு வந்தது. ஆனால், இந்த வார எலிமினேஷன் தகவலின்படி, சாண்ட்ரா வெளியேறியுள்ளதால், இறுதியாக சபரி, திவ்யா, விக்ரம் மற்றும் அரோரா ஆகிய நால்வரும் பைனலிஸ்ட் சுற்றுக்கு முன்னேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பைனலிஸ்ட் பட்டியல் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் தங்களின் ஃபேவரிட் நபர்கள்  பைனலிஸ்ட்டில் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். மற்றொரு தரப்பினர், “சாண்ட்ரா இன்னும் உள்ளே இருக்க வேண்டியவர்.” என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தற்போது சமூக வலைத்தளங்களில் சாண்ட்ரா பெற்றதாக கூறப்படும் சம்பள விவரம் வெளியாகி பெரும் பேசுபொருளாகி வருகிறது. வெளியான தகவல்களின் படி, ஒரு நாளுக்கு 15,000 ரூபாய் வீதம் மொத்தமாக 98 நாட்களுக்கு 14,70,000 ரூபாவை சம்பளமாக சாண்ட்ரா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement