• Apr 26 2024

சபரி மலைக்கு யாத்திரை சென்ற புகழ்- வைரலாகும் வீடியோ- யாருடன் சென்றிருக்கிறார் என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் புகழ்.இவர. இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்தாலும் இவருக்கென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி என்று தான் கூற வேண்டும்.

இந்த நிகழ்ச்சி மூலம் பட்டித் தொட்டியெல்லாம் பிரபல்யமான இவர்  சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை ஆகிய படங்கள்  இந்த ஆண்டு ரிலீஸ் ஆகின.


தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார். இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார்.

 இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் புகழ் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி யாத்திரை செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. 


நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். புகழுடன் சக்தியும் சபரிமலைக்கு கன்னி சாமியாக சென்றுள்ளார் என ரித்திகா பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement